தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறை மகளிரணித் தளபதி தமிழினிக்காக ஒரு சிங்களப் பாடல் வெளிவந்துள்ளது.
இலங்கையில் நல்லிணக்கம் மற்றும் சமாதானம் ஏற்படும் என உறுதியாக நம்பும் அனைத்து மக்களுக்கும் இந்த பாடல் சமர்ப்பணம் என தயாரிப்பு குழு தெரிவித்துள்ளது.
புற்று நோயினால் பாதிக்கப்பட்டிருந்த தமிழினி 2015ம் ஆண்டு ஒக்டோபர் 18ம் திகதி மஹரகம வைத்தியசாலையில் உயிரிழந்தார்.
கடந்த 1991 ஆம் ஆண்டு 19 ஆவது வயதில் விடுதலைப்புலிகள் அமைப்பில் இணைந்த தமிழினி பின்னர் அந்த அமைப்பின் மகளிர் பிரிவு அரசியல்துறை பொறுப்பாளராக உயர்ந்தார்.
இராணுவத்துக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையிலான யுத்தம் முடிவடைந்ததையடுத்து, 2009 ஆம் ஆண்டு மே மாதம் 29 ஆம் திகதி வவுனியா மனிக்பாம் இடைத்தங்கல் முகாமில் தஞ்சமடைந்திருந்த போது தமிழினி கைது செய்யப்பட்டார்.
நீண்டகாலமாக வெலிக்கடைச் சிறைச்சாலையில் பெண்களுக்கான பிரிவில் தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழினி, பின்னர் வவுனியா பூந்தோட்டம் புனர்வாழ்வு பயிற்சி நிலையத்தில் சேர்க்கப்பட்டு பின்னர் விடுதலை செய்யப்பட்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
|
Tamil Media House TV