“6  ஆண்டுகளில் மறுபிறவி எடுத்து பழி தீர்ப்பாராம் ஜெ ” - பீதி  கிளப்புகிறார் பிரபல  ஜோதிடர்...!!

மறைந்த  முதலமைச்சர்  ஜெயலலிதாவின்  ஆவி, கடும்  கோபத்துடன் ,  சாந்தி அடையாமல்  இருப்பதாக பழனியைச் சேர்ந்த  பிரபல ஜோதிடர் அசோக்ஜி தெரிவித்துள்ளார்.

இவர் ஏற்கனவே  பல  முக்கிய  நிகழ்வுகளை  முன்கூட்டியே  கணித்துள்ளார்  என்பது  குறிப்பிடத்தக்கது.

இவர்  கணித்தது....?

சட்டபேரவை தேர்தலில் அதிமுக  வெற்றி பெரும்  என  கணித்தது

ஜெயலலிதா   சிறையில்  இருந்து  வீடு  திரும்புவார்   என  கணித்தது

2015 ஆம் ஆண்டு  இறுதியில் சென்னையில்  வெள்ளம் வரும் அபாயம்  இருக்கும் என  முன்கூட்டியே  அறிவித்து இருந்தது.

இவையனைத்தும் நடந்தது.

இந்நிலையில் தற்போது, மறைந்த முதல்வர் ஜெயலிதாவின்  ஆவி,  சாந்தி  அடையாமல் கடும் கோபத்துடன்  இருப்பதாகவும், தெரிவித்துள்ளார்.

அதாவது,  ஒருவர்  இறந்த  பின்பு, இறந்த நாள் முதல் மூன்று நாட்களுக்குள் அவருக்கு   நிகழ்ந்த, விரும்பத்தகாத நிகழ்வு  நடைபெற்று  இருந்தால்  நிச்சயம்  ஆவி  பலி வாங்கும் என  தெரிவித்துள்ளார்.

அதே சமயத்தில், ஜெயலலிதாவின் ஆவி பூமியில் 2023 ஆம்  ஆண்டு வரை நிச்சயம் இருக்கும் எனவும்,  அது இன்னும் 6 ஆண்டுகளில் மறுபிறவி  எடுத்து  பழிவாங்கும்  எனவும் ஜோதிடர் அசோக்ஜி தெரிவித்துள்ளார் என்பது குறிபிடத்தக்கது.

மேலும்,  ஜெயலிதா  பயன்படுத்திய , உடைமைகளை யாரேனும்  கைப்பற்றினாலோ, மோச  வேலையில் ஈடுபட்டாலோ அவர்களை , ஜெ  ஆவி  சும்மா  விடாது என   தெரிவித்துள்ளார்.

ஜோதிடரின்  இந்த கணிப்பு , தற்போது  பெரும் பரபரப்பை  ஏற்படுத்து உள்ளது.





Tag : eelam songs,Gangai Kadaram,Gangai Kadaram songs,கங்கை கடாரம்,Gangai Kadaram kaalakam Eelam
சென்னை அப்பல்லோ ஆஸ்பத்திரியின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த ஜெயலலிதாவின் உயிர் பிரிந்தது. முதல்வர் ஜெயலலிதா காலமானதாக அப்பல்லோ மருத்துவமனை தரப்பில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இரவு 11.30 மணியளவில் முதல்வர் உயிரிழந்ததாக மருத்துவமனையின் செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல்நலக் குறைவு காரணமாக கடந்த செப்டம்பர் மாதம் 22-ந்தேதி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவரது உடல்நிலை மற்றும் அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் தொடர்ந்து அறிக்கை மூலம் தெரியப்படுத்தி வந்தது. முதல்வர் உடல்நலம் பெற்றுவிட்டதாகவும், விரைவில் வீடு திரும்ப வாய்ப்பு உள்ளதாகவும் சமீபத்தில் அறிக்கை வெளியிட்டதால் தொண்டர்கள் மிகுந்த நம்பிக்கையில் இருந்தனர். 

அவர், எந்த நேரத்திலும் டிஸ்சார்ஜ் செய்யப்படலாம் என்ற வேளையில் அவருக்கு ஞாயிற்றுக்கு மாலை திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதனால் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ரத்த ஓட்டத்தை சரிசெய்வற்காக ஆஞ்ஜியோ சிகிச்சை அளிக்கப்பட்டது.

இதனால் கட்சியினர் கவலையில் ஆழ்ந்தனர். அப்பல்லோ மருத்துவமனை முன்பு விடிய விடிய காத்து நின்ற தொண்டர்கள், முதலமைச்சர் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்தனர். அதேசமயம் மருத்துவமனை மட்டுமின்றி சென்னை முழுவதும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. அனைத்து மாவட்டங்களிலும் உள்ள காவல்நிலையங்களில் பணியாற்றும் அனைத்து போலீசாரும் விடுப்பு எதுவும் எடுக்காமல் காலையில் பணிக்கு வரவேண்டும் என சுற்றறிக்கை அனுப்பப்பட்டது.

இதற்கிடையில், அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் அப்பல்லோ மருத்துவமனையில் அவசரமாக கூடி ஆலோனை நடத்தினர். இதில் பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசனை செய்யப்பட்டது. 

இந்த சூழ்நிலையில், சென்னை அப்பல்லோ ஆஸ்பத்திரி நிர்வாகம் நேற்று பிற்பகல் வெளியிட்ட புதிய செய்திக்குறிப்பில் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளதாக அறிவித்தது. இதனால், அப்பல்லோ வாசலில் கூடி இருக்கும் அ.தி.மு.க தொண்டர்கள் மற்றும் மாநிலம் முழுவதும் உள்ள அக்கட்சியினர் பெரும் சோகத்தில் ஆழ்ந்தனர். 

அதேசமயம், முதல்வருக்கு சிகிச்சை அளித்த லண்டன் மருத்துவர் ரிச்சர்டு பீலே வெளியிட்ட அறிக்கையிலும், முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல்நிலை மிகவும் மோசமாக உள்ளதாக தெரிவித்தார். 

எனவே, தொண்டர்களிடையே உள்ள கவலை மேலும் மேலும், உலகின் மிக உயர்ந்த உயிர் காக்கும் சிகிச்சை வழங்கப்பட்டதாகவும் அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்த நிலையில், இன்று மாலை 5.15 மணியளவில் ஜெயலலிதாவின் உயிர் பிரிந்ததாக செய்திகள் வெளியானது. ஆனால் இந்த செய்திகள் தவறானவை என்றும் தொடர்ந்து முதல்வருக்கு உயர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் மறுப்பு செய்தி வெளியிடப்பட்டது. 

இந்நிலையில், முதல்வர் ஜெயலலிதா காலமானதாக அப்பல்லோ மருத்துவமனை தரப்பில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இரவு 11.30 மணியளவில் முதல்வர் உயிரிழந்ததாக மருத்துவமனை தரப்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதயம் செயலிழந்ததால் முதல்வர் உயிர் பிரிந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதல்வர் ஜெயலலிதாவின் இதயத்தை செயற்கையாக தூண்டுவித்து செயல்பட முயற்சிகள் நடப்பதாக அப்பல்லோ மருத்துவமனை தெரிவித்துள்ளது. 

முதல்வர் ஜெயலலிதாவுக்கு extracorporeal membrane heart assist device மூலமாக சிகிச்சை தொடர்வதாக அப்பல்லோ தெரிவித்துள்ளது. அதாவது இதயமும், நுரையீரலும் செயல்பட முடியாத நிலைக்குப் போகும்போது செயற்கையாக தூண்டுவித்து செயல்பட வைக்கும் முயற்சியே இது. கிட்டத்தட்ட பேஸ்மேக்கர் போல.

இந்த இதயத்தைத் தூண்டுவிக்கும் சாதனம் மூலமாக முதல்வரின் இதயத்தை செயல்பட வைக்க முயற்சிகள் நடப்பதாக கூறியுள்ளது அதிமுகவினரின் கவலைகளை அதிகரிப்பதாக உள்ளது

Tamil Nadu Chief Minister who suffered a cardiac arrest today has been put on a heart assist device. The Appolo Hospital where she has been admitted says that she is on an extracorporeal membrane heart assist device.
முதல்வர் ஜெயலலிதாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டதை அடுத்து தமிழகத்தின்
பல்வேறு பகுதிகளில் இருந்து அதிமுகவினர் சென்னை நோக்கி விரைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு நீர் சத்து குறைபாடு மற்றும் காய்ச்சல் காரணமாக சிகிச்சை பெற்று வந்தார். அவர் குணமடைந்து விட்டதாகவும் விரைவில் வீடு திரும்புவார் என்றும் மருத்துவமனை நிர்வாக தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை இரவு அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதாக தகவல் வெளியானது. மேலும், அப்பல்லோ மருத்துவமனையில் அவருக்கு மருத்துவக்குழு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இந்த சூழ்நிலையில் மருத்துவமனை வளாகத்தில் கூடிய அதிமுக தொண்டர்கள் ஜெயலலிதா குணம் அடைய வேண்டி கண்ணீர் மல்க பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.

ஜெயலலிதாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டது குறித்த தகவல் அறிந்த பிற மாவட்ட அதிமுக நிர்வாகிகள் தங்களது ஆதரவாளர்களுடன் சென்னை நோக்கி புறப்பட்டுள்ளனர். எனவே, அசம்பாவிதங்களை தடுக்க அப்பல்லோ மருத்துவமனை வளாகத்தில் கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும், மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து காவல் நிலையங்களும் உஷார் படுத்தப்பட்டுள்ளன.
எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் ஜெயலலிதாவின் உடல் நலம் குறித்து அறிந்து தூத்துக்குடியில் இருந்து உடனடியாக சென்னை திரும்பி உள்ளதாக கூறப்படுகிறது.
01.மனதுக்குப் பிடித்த ஒரு புத்தகத்தை எத்தனை முறை வாசித்தாலும் மனம் புதிய உணர்வைப் பெறுவதை ப் போலத்தான், பிரபாகரன் பற்றிய நிகழ்வுகளைப் படிப்பதும். தமிழனுக் கு வீரத்தின் அர்த்தத்தை தனது வாழ்க்கை மூலம் எடுத்துக் காட் டியவர் அல் லவா…

02.தம்பி எனத் தமிழர்களால் அழை க்கப்படும் அண்ணன். 30 ஆண்டு கா லம் இலங்கை அரசுக்குக் கிலியூட்டி வரும் புலிப் படைத் தலைவர்,  வீரத்தின் விளைநிலமாக தமிழ் ஈழத்தை மாற் றிக்காட்டிய மனிதர்!

அரிகரன் – இதுதான் அப்பா வேலுப்பிள்ளை முதலில்வைத்த பெயர். ஒரு அண்ணன், இரண்டு அக்காக்களுக்கு அடுத்துப் பிறந்த கடைக்குட்டி என்பதால், துரை என்றுதான் எல்லாரும் கூப்பிடுவார்கள். பிறகு என்ன நினைத்தாரோ, பிரபாகரன் என்று மாற்றுப் பெயர் சூட்டியிருக்கிறார் அப்பா!

வல்வெட்டித்துறையைச் சேர்ந்த பெரியசோதி, சின்னசோதி, சந்திரன், குட்டிமணி, தங்கத்துரை, சந்திரன், பிரபாகரன் ஆகிய ஏழு பேர் சேர்ந்து தான் விடுதலை இயக்கத்தை முதலில் தொட ங்கினார்கள். இதற்குப் பெயர் வைக்கவில்லை. பிரபாகரன் தான் அணியில் இளையவர் என்ப தால், ‘தம்பி’ என்றார்கள். எல்லார் க்கும் தம்பியானதும் அப்படித்தான்!


03.பிரபாகரனுக்கு அரசியல் முன் னோடியாக இருந்தவர் பொ.சத்திய சீலன். “போலீஸ் நிலையங்களைத் தாக்கி ஆயுதங்கள் எடுக்க வேண்டு ம்” என்று இவரைப் பார்த்து பிரபா கரன் கேட்க, “எடுத்தால் எங்கே வை ப்பது” என்று சத்தியசீலன் திருப்பிக் கேட்க… அதன் பிறகுதான் காட்டு வாழ்க்கையைத் தேர்ந் தெடுத்திருக்கிறார்!


04.பிரபாகரன் அடிக்கடி படித்த நாவல் – அலெக்ஸ் ஹேவியின் ‘ஏழு தலைமுறைகள்’. அதில் ‘இடியும் மின்னலும் இல்லாமல் மழை பொழி யாது. போராட்டம் நடத்தாமல் யாரும் எதையும் தர மாட்டார்கள்’ என்ற வரிகளை அடிக்கோடு போட்டுவைத்திருந்தார்!
05.மிக மிக வேகமாக நடக்கும் பழக்கமுடையவர் பிரபாகரன். பள்ளிக் கூடம் போகும்போது சட்டைப் பையில் இருக்கும் பேனாவை இடது கை யால் பிடித்துக்கொள்வாராம். அந்தப் பழக்கம் பிற்காலத்திலும் தொடர்ந் திருக்கிறது!


06.”ஏன் எப்போதும் சீருடையில் இருக்கிறீ ர்கள்?” என்று வெளிநாட்டுத் தமிழர் ஒருவர் கேட்டபோது பிரபாகரன் சொன்னது, “யாரும் அணியத் துணியாதது இந்த உடை தான். அதனால்தான் எப்போதும் இதில் இரு க்கிறேன்.”


07.”பிரபாகரன் ஒருபோதும் புகைத்தது இல் லை. மது அருந்தியதும் கிடையாது. மற்றவ ர்களிடமும் இப்பழக்கத்தை அவர் விரும்ப வில்லை. விடுதலைப் புலிகள் அமைப்பில் புகைபிடிக்கும் பழக்கம்கொண்ட ஒரு வரை பிரபாகரன் சகித்துக்கொண்டார் என்றால், அது பால சிங்கமாக த்தான் இருக்கும். பாலாவிடம் இருந்துவ ரும் சிக ரெட் நெடி பிரபாகரனுக்குப் பிடிப்பதில்லை. எனவே, பிரபா முன்னிலை யில் பாலாவும் சிகரெட் பிடிப்பதில்லை” என்கிறார், பாலசிங்கத்தின் மனைவி அடேல்!


08.அக்காவின் திருமணத்தையட்டி தனக்கு அணிவிக்கப்பட்ட மோதிர த்தை விற்றுத்தான் அமைப்புக்கு முதல் துப்பாக்கி வாங்கப் பணம் கொடு த்தார் பிரபாகரன். அதன் பிறகு அவர், நகை அணிவதில்லை!


09.எந்த ஆயுதத்தையும் கழற்றி மாட்டிவிடுவார். ஆயுதங்கள் தொடர்பான அனைத்து ஆங்கிலப் புத்தகங்களின் மொழிபெயர்ப்புகளும் அவரிடம் இரு ந்தன. ‘தொழில்நுட்ப அறிவு இல்லாதவன் முழுமையான போராளியாக முடியாது’ என்பது அவரது அறிவுரை!


10.ஒவ்வொரு நவம்பர் மாதமும் 25, 26, 27 ஆகிய மூன்று நாட்களும் பிரபாகரன் உண்ணாவிரதம் இருப்பார். 26 அவரது பிறந்த நாள். 27 மாவீரர் நாள். அன்று மாலை மட்டும் தான் திரையில் தோன்றி அனை வருக்குமான உரையை நிகழ்த்துவார்!


11.‘இயற்கை எனது நண்பன்; வாழ்க்கை எனது தத்துவாசிரியன்; வரலாறு எனது வழிகாட்டி’ என்ற வார்த்தைகளைத் தா ன் அவர் தனது டைரியில் எழுதி வை த்திருப்பார்!


12.போரில் யார் காயமடைந்து பார்க்கப்போனாலும், ‘பொன்னியின் செல் வன்ல வரும் பெரிய பழுவேட்டரையருக்கு 64 வீரத் தழும்புகள் உண்டு’ என்று சொல்லித் தைரியம் கொடுப்பாராம் பிரபாகரன்!

13.ஆறு கோடியே 43 லட்சம் ரூபாய் பிரபாகரனுக்கு எம்.ஜி.ஆர். கொடுத் திருக்கிறார். பிரபாகரன் கொடுத்த துப்பாக்கி ஒன்றைத் தனது தலைய ணைக்குக் கீழ் எம்.ஜி.ஆர். வைத்திருந்தார்!


14.பேனாவை மூன்று விரல்களால் பிடித்துத்தான் அனைவரும் எழுது வார்கள். பிரபாகரன் எழுதும்போது ஐந்து விரல்களாலும் பிடித்திருப்பார்!


15.பிரபாகரனுக்குப் பிடித்த புராண க் கதாபாத்திரம் கர்ணன். “தன்னி ழப் புக்கும் உயிர்த் தியாகத்துக்கும் ஒவ்வொரு மணித்துளியும் தயாரா க இருந்தவன் கர்ணன். அவனை எப்போதும் நினைப்பேன்” என்பார்!


16.தமிழீழம் கிடைத்த பிறகு எனது பணி காயம்பட்ட போராளிகளைக் கவனிப்பதாகவும் பாதிக்கப்பட்ட மக்களின் முன்னேற்றம் பற்றியதாகவும் மட்டுமே இருக்கும் என்று பிரபாகரன் பகிரங்கமாக அறிவித் திருந்தார்!

17.பிரபாகரன் குறித்து தங்களது வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தில் மிக உயர்வாக எழுதிய இந்திய ராணுவத்தின் உயர் அதிகாரிகள் மேஜர் ஜென ரல் ஹர்கிரத் சிங், ஜெனரல் சர்தேஷ் பாண்டே, ஜெனரல் திபேந்திரசிங். இவர்கள் மூவரும் இந்திய அமைதிப் படைக்குத் தலைமை வகித்து பிர பாகரனுடன் மோதியவர்கள்!

18.அநாதைக் குழந்தைகள் (போரில் பெற்றோரை இழந்தவர்கள்) மீது அள வுக்கு அதிகமான பாசம் வைத்திருந்தார் பிரபாக ரன். அவர்களைப் பரா மரிக்க செஞ்சோலை சிறுவர் இல்லம், காந்தரூபன் அறிவுச் சோலை ஆகிய காப்பகங்களை வைத்திருந்தார். பெற்றோர் இல்லா த அநாதை யாக அமைப்புக்குள் வந்து பெரிய போரா ளியாக ஆகி மறைந்தவர் காந் தரூபன்!

19.உயிர் பறிக்கும் சயனைட்தான் எங்கள் இயக்கத் தை வேகமாக வள ர்த்த உயிர்’ என்றார் பிரபாகரன்!

20.பிரபாகரனைச் சிலர் குறை சொன்னபோது, அமைப்பில் இருந்து ஒன் றரை ஆண்டுகள் விலகி இருந்தார்!

21.பிரபாகரனிடம் நேரடியாக போர்ப் பயிற்சி பெற்ற முதல் டீம்: கிட்டு, சங்கர், செல்லக்கிளி, பொன்னம்மான். இரண்டாவது டீம்: சீலன், புலேந் திரன். மூன்றாவது டீம்: பொட்டு, விக்டர், ரெஜி. இவர்கள்தான் அடுத்து வந்தவர்களுக்குப் பயிற்சி கொடுத்தவர்கள்!


22.தன் அருகில் இருப்பவர் குறித்து யாரா வது குறை சொன்னால் பிரபாகரன் பதில் இப்படி இருக்குமாம், “நான் தூய்மையாக இருக்கிறேன். இறுதி வரை இருப்பேன். என் னை யாரும் மாற்ற முடியாது. நீங்கள் குறை சொன்னவரை என் வழிக்கு விரைவில் கொ ண்டுவருவேன்!”


23.”ஒன்று நான் லட்சியத்தில் வென்றிருக்க வேண்டும். அல்லது போராட்டத்தில் இறந்திருக்க வேண்டும். இரண்டும் செய்யாத என்னை எப்படி மாவீரன் என்று சொல்ல முடியும்?” என்று அட க்க மாகச் சொல் வார்!

24.மிக நெருக்கடியான போர்ச் சூழல் நேரங்களில் பெட்ரோல் அல்லது ஆசிட்டுடன் ஒருவர் பிரபாகரனுடன் இருப்பாராம். அவருக்கு ஏதாவது ஆனால், உடனேயே உடலை எரித்துவிட உத்தரவிட்டிருந்தார். எதிரியின் கையில் தன் சாம்பல்கூடக் கிடைக்கக் கூடாதுஎன்பதில் தெளிவாக இரு ந்திருக்கிறார்!


25.‘தமிழீழ லட்சியத்தில் இருந்து நான் பின்வாங்கினால் என்னுடைய பாதுகாவலரே என்னைச் சுட்டுக் கொல்லலாம்’ என்று பகிரங்கமாக அறிவித்திருந்தவர்.
தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறை மகளிரணித் தளபதி தமிழினிக்காக ஒரு சிங்களப் பாடல் வெளிவந்துள்ளது.

இலங்கையில் நல்லிணக்கம் மற்றும் சமாதானம் ஏற்படும் என உறுதியாக நம்பும் அனைத்து மக்களுக்கும் இந்த பாடல் சமர்ப்பணம் என தயாரிப்பு குழு தெரிவித்துள்ளது.

புற்று நோயினால் பாதிக்கப்பட்டிருந்த தமிழினி 2015ம் ஆண்டு ஒக்டோபர் 18ம் திகதி மஹரகம வைத்தியசாலையில் உயிரிழந்தார்.

கடந்த 1991 ஆம் ஆண்டு 19 ஆவது வயதில் விடுதலைப்புலிகள் அமைப்பில் இணைந்த தமிழினி பின்னர் அந்த அமைப்பின் மகளிர் பிரிவு அரசியல்துறை பொறுப்பாளராக உயர்ந்தார்.

இராணுவத்துக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையிலான யுத்தம் முடிவடைந்ததையடுத்து, 2009 ஆம் ஆண்டு மே மாதம் 29 ஆம் திகதி வவுனியா மனிக்பாம் இடைத்தங்கல் முகாமில் தஞ்சமடைந்திருந்த போது தமிழினி கைது செய்யப்பட்டார்.

நீண்டகாலமாக வெலிக்கடைச் சிறைச்சாலையில் பெண்களுக்கான பிரிவில் தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழினி, பின்னர் வவுனியா பூந்தோட்டம் புனர்வாழ்வு பயிற்சி நிலையத்தில் சேர்க்கப்பட்டு பின்னர் விடுதலை செய்யப்பட்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

நீங்கள் எம்மோடு உள்ளீர்கள் …!!!



வேகமாக நடந்துவரும் அந்தக்கைத்தடியின் சத்தம்… முற்கூட்டியே எம்மைத் தயார்ப்படுத்திவிடும் வாகனத்தின் உறுமல்… எவரிடமும் காணமுடியாத, தூர இருப்பவர்களையும் ஈர்த்தெடுத்து மகிழ்விக்கும் அந்த இனிய சிரிப்பொலி… தனது எத்தகைய துன்பங்களையும் கடந்து பிறருக்காக எப்போதும் மலர்ந்து கிடக்கும் அழகிய வதனம்… அவரைப் போலவே இனிமையான அருகிருக்கும் தோழர்கள்… எல்லாமே, எல்லோருமே இப்போதும் எங்கள் அருகிருப்பது போல…. உண்மையில் அப்படியொரு நாளாந்தம் அருகிலும், இல்லையென்றால் நினைவிலும் இல்லாமல் நாங்கள் ஒரு கணம்கூட இயங்கியதில்லை.

அந்தக் குடும்பம் அத்தனை அழகானது, இனிமையானது, அற்புதமானது… போர்க்களம், நிர்வாகப்பணி, அரசியல்பணி, இராஜதந்திரப்பணி என ஒன்றுக்கொன்று வேறுபட்ட பண்புகளோடு அணுகப்பட வேண்டிய சிக்கல் நிறைந்த நாளாந்தத்தில் தமிழ்ச்செல்வண்ணை சுழன்றுகொண்டிருப்பார். அதனை விடவும், வெளியே அவர் அறியப்பட்டதற்கு அப்பாலும், எமது தேசியத் தலைவரின் பிரத்தியேகமான, வெளிச்சொல்ல முடியாத பாரிய பணிகள் நாளாந்தம் அவரது தோள்களிலிருக்கும்.


நள்ளிரவு தாண்டிய ஒரு நேரத்திலிருந்து அதிகாலை வரையான மிகச்சிறிய மணித்தியாலங்களே அவரது நித்திரைக்கான நேரமாக இருக்கும். இத்தனைக்கும் மத்தியில் ஒரு கருணைத் தாயாக, கண்டிப்பான தந்தையாக, சகோதரனாக, பொறுப்பாளனாக தன் அருகிருக்கும் போராளிகளை அரவணைக்க அவர் தவறுவதே இல்லை. தமிழ்ச்செல்வண்ணையின் அத்தனை இயல்புகளும் அவரின் அருகிருக்கும் போராளிகளை இயல்பாகப் பற்றிக்கொள்ளும். அவர்கள் தேசியத் தலைவருக்குப் படிப்படியாக அறிமுகமாகிப் பெருவிருட்சங்களாகிவிடுவர்.


அலெக்ஸ்… ஒரு மருத்துவப் போராளியாக தமிழ்ச்செல்வண்ணையின் அருகில் வந்துசேர்ந்தது ஒரு அற்புதமான இணைவு. 1990களின் ஆரம்பத்தில் தமிழ்ச்செல்வண்ணை விழுப்புண்ணடைந்ததன் பின் அந்த அற்புத இணைவு நடந்தது. அன்றிலிருந்து வீரச்சாவடையும் இறுதிக்கணம் வரையும் அவர்களது வாழ்வு ஒன்றித்தே இருந்தது. போர்க்களத்திலிருந்து இராஜதந்திரப் பயணங்கள் வரை எல்லாவற்றிலும் அவர்கள் இணைந்தே இருந்தார்கள்.


அது 1993ஆம் ஆண்டு. பூநகரிச் சமர்முனையில் ஒரு நாள். களத்தில் ஒரு எதிர்பாராத விமானத்தாக்குதல். மூத்த தளபதி சொர்ணம் அவர்களும் தமிழ்ச்செல்வண்ணையும் தாக்குதலுக்குள்ளாகினர். அந்தக் கணப்பொழுதில் தமிழ்ச்செல்வண்ணையைக் கீழே விழுத்திவிட்டு அவரின் மேலே தோழர்கள்… கப்டன் வைத்தி வீரச்சாவைத் தழுவிக்கொள்ள தமிழ்ச்செல்வண்ணை மோசமான காயங்களுக்குள்ளானார். அவரோடு காயமடைந்தவர்களுள் மேஜர் துளசியுடன் அலெக்ஸ் உம் ஒருவன்.


ஒரு தனிப்பட்ட மருத்துவனாக, மெய்ப்பாதுகாவலனாக, பணி உதவியாளனாக எனப் பல்வேறுபாத்திரங்கள் ஏற்றுப் பின்னர் தமிழ்ச்செல்வண்ணையின் பாரிய சுமைத்தாங்கியாக அலெக்ஸ் விளங்கினான். குறிபார்த்துச் சுடுவதிலும், படைத்துறைசார் அறிவியலிலும், பன்னாட்டுத் தொடர்புகளிலும் அலெக்ஸ் இயல்பாகவே கொண்டிருந்த அபாரத் திறமை தேசியத் தலைவரின்பால் அவனை ஈர்க்கச் செய்தது. அதன்பின்னர் அவன் ஆற்றிய பணிகள் அளப்பெரியன.


மிகுதன்… பிந்திய நாட்களிலேயே தமிழ்ச்செல்வண்ணையுடன் நெருக்கமாக இணைந்து கொண்டவன். அவரது பணிகளுக்கான உதவியாளனாக சுமைகள் தாங்கியவன். 1998ஆம் ஆண்டில் அமைப்பில் இணைந்த அவன் குறிப்பிட்ட காலங்கள் துறைசார் கற்கைகளில் ஈடுபட்டான். அவற்றிலெல்லாம் அனைவரையும் கவரும் முதல்வனாக அவனே திகழ்ந்தான். பின்னர் ஆனையிறவு மீட்புச் சமரிலும் அதன்பின்னரான சமர்கள் சிலவற்றிலும் கேணல் கிட்டு பீரங்கிப் படையணியின் பீரங்கி அணியொன்றில் பாராட்டும் படியான சேவையாற்றினான். 

எதிலும் தனது சுயமான முயற்சியைச் செலுத்தி அதனைத் தன்வசப்படுத்துவதில் மிகுதன் திறமையானவன். குறிப்பாக கணினித்துறையில் அவன் தனது பொறுப்பாளர் அளித்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திச் சுயமாகவே முன்னேறினான். வன்னியில் பதிப்புத்துறையில் கணினிகள் பயன்படுத்தப்படத் தொடங்கியபோது அதன் தொடக்கத்தில் மிகுதனின் பங்கு அளப்பெரியது. எமது அமைப்பின் உத்தியோகபூர்வ ஏடான ‘விடுதலைப்புலிகள்’ உட்பட ஏனையவற்றினது வடிவமைப்பிலும் அவன் பெரும் பங்காற்றினான். 

இங்கு வெளிவந்த பாராட்டுப்பெற்ற சுவரொட்டிகள், நூல்கள் பலவற்றிலும் மிகுதனின் உழைப்பு இருந்தது. உண்மையில் இந்தத் துறையில் அவன் ஒரு வல்லுனன மிகுதன் எங்களது குடும்பத்தின் கலகலப்பான வாழ்விற்குப் பெரிதும் காரணமாக இருந்த ஒரு தோழன். அவனிடம் ‘அறுவை’ வேண்டாத யாருமே எங்களில் இல்லை. மிகுதனுக்கு மரக்கறிச் சாப்பாடு என்றால் ஒரு தனியான பிரியம். இதனை நன்கு அறிந்து வைத்திருந்த தமிழ்ச்செல்வண்ணை எங்காவது அப்படியான சாப்பாடு கிடைக்கும் நிகழ்வுகளுக்குச் செல்வதென்றால் அவனையும் தேடிப்பிடித்து அழைத்துச் செல்வதற்கு என்றுமே தவறுவதில்லை.


சுமைகூடிய எங்களது குடும்பத்தின் நிர்வாக வேலைகள் நேதாஜியின் பொறுப்பில் இருக்கும். அதனைவிடவும் தமிழ்ச்செல்வண்ணையின் பிரத்தியேகமான வேலைகளும் அவனுக்கு உண்டு. புத்தகங்கள் என்றால் தமிழ்ச்செல்வன் அண்ணைக்கு உயிர். அந்த உயிரை நேதாஜியிடம் கொடுத்தே தனது நூலகத்தில் பத்திரப்படுத்திக்கொள்வார். அவற்றைச் சலிப்பின்றித் தனக்குக்கிடைக்கும் நேரங்களில் எல்லாம் நேதாஜி படித்துக்கொண்டே இருப்பான். படுக்கையிலும் அவனது தலைமாட்டில் எப்போதும் ஒரு புத்தகம் இருக்கும். அமைதியான சுபாவம் கொண்ட அவனிடமிருந்த நிறைந்த அறிவை அவனை மிக நெருங்கியவர்கள் அறிவார்கள்.


நேதாஜியின் பொறுப்புணர்வும், அமைதியும், நேர்த்தியும் தமிழ்ச்செல்வண்ணையால் விரும்பப்பட்டவை. முகாமிலுள்ள போராளிகளுக்கு எப்போதும் நல்ல உணவு கொடுக்கவேண்டும் என்ற தமிழ்ச்செல்வண்ணையின் விருப்பத்திற்கு மட்டும் அவனால் எல்லா வேளைகளிலும் ஈடுகொடுக்க முடிவதில்லை. 

அப்போதெல்லாம் ஒரு குழந்தையைப்போல அவருடன் சண்டை பிடித்துக்கொள்வான்.


தமிழ்ச்செல்வண்ணை வாகனத்தில் கழித்த காலங்களும் கணிசமானவை. ஒரே நாளில் அவரது வாகனம் எங்கெங்கோ எல்லாம் சுற்றிச்சுழன்று திரியும். அச்சுறுத்தல் நிறைந்த எல்லைக் கிராமங்களில் இருந்து உயிர்ப்பலியெடுக்கத் துடித்துக் கொண்டிருக்கும் போர்க்களங்கள்வரை களத்திலும் தளத்திலும் தமிழ்ச்செல்வண்ணையின் பயணம் நீண்டது. அவரது நம்பிக்கைக்குரிய சாரதியாக செல்வம் இருந்தான்.
சிறுவயது முதல் தனது வாழ்வைப் போராட்டத்தில் ஒன்றித்திருந்தவன் செல்வம். களங்களில் நின்றான். சிறப்புப் பயிற்சிகள் பெற்றான். என்றாலும் செல்வம் என்றால் அவனது சாரதித்துவ ஆற்றல் மட்டுமே எல்லோரது கண்களுக்குள்ளும் வந்து நிற்கும். உண்மையில் அதில் அவன் ஒரு கலைஞன். களமுனையில் தமிழ்ச்செல்வன் அண்ணையைச் செல்வம் அழைத்துச் செல்லும்போது அருகிருந்தால் நெஞ்சு படபடக்கும். 

பாதுகாப்புக் கருதி அத்தனை சிக்கல் நிறைந்த பாதைகளை தமிழ்ச்செல்வண்ணை தயக்கமின்றித் தெரிவுசெய்வார்.
அப்போதெல்லாம் செல்வத்தின் ஆற்றல் மீது அவர் வைத்திருக்கும் அளவற்ற நம்பிக்கை புலப்படும். நீண்ட சந்திப்புக்கள் நடத்தி, பயணங்கள் செய்து களைத்துப் போயிருக்கும் தமிழ்ச்செல்வண்ணை எப்போதாவது சோர்வடையும் சந்தர்ப்பங்களில் கூட வாகனத்தில் ஏறிக் கதவைச் சாத்திக்கொள்ளும் வரை தனது சோர்வை வெளிப்படுத்தமாட்டார். அப்படியான சந்தர்ப்பங்களில் வாகனம் அவரது குட்டிப் படுக்கையறையாகிவிடும். நம்பிக்கையான சாரதி இருந்தால் மட்டுமே அவர் அப்படி இருந்துகொள்வதைக் கண்டிருக்கிறோம். அந்த நம்பிக்கைக்குரியவர்களுள் செல்வம் முதன்மையானவன்.
ஆட்சிவேலும், மாவைக்குமரனும் மிகப் பிந்திய நாட்களில் எமது குடும்பத்தில் இணைந்து கொண்டவர்கள்.


 நற்பண்புகளும் உறுதியும் நிறைந்த அவர்களை வளர்த்தெடுக்கும் விருப்பம் தமிழ்ச்செல்வண்ணைக்கு இருந்தது. கடினமான பாதுகாப்புப் பயிற்சிகளைப் பெற்று வந்திருந்த அவர்கள் பாதுகாப்பு ரீதியாக எப்போதும் சிக்கல் நிறைந்த பகுதிகளிலேயே பணியாற்றி வந்த தமிழ்ச்செல்வண்ணையின் பாதுகாப்பு அணியில் அயராது உழைப்பார்கள். ஆட்சிவேல் அமைதியானவன், எவருடனும் எந்தச் சோலிக்கும் போகமாட்டான், தானும் தன்பாடுமாய் இருந்துகொள்வான்.


மாவைக்குமரன் துடியாட்டமானவன், எப்போதாவது எதையாவது செய்துகொண்டே இருப்பான். கரும்புலிகள் அணியில் இணைந்துகொள்ளும் உணர்வோடு அவன் கடைசிவரை இருந்தான்.
போராளிகள் எப்போதும் தமது உயிரை அர்ப்பணிக்கும் மனநிலையோடு இருக்கவேண்டும் என்பதைத் தமிழ்ச்செல்வன் அண்ணை வலியுறுத்திக் கொண்டே இருப்பார். அவரும் அவ்வாறே இருந்தார். ஒரு அரசியல்துறைப் பொறுப்பாளராக, சிவில் உடையில் அவர் வெளியே தோற்றமளித்தாலும் அவரது மனம் எப்போதும் போர்க்களத்திலேயே சுழன்று கொண்டிருக்கும்.


 மக்களுக்காகக் களத்தில் தன்னை அர்ப்பணித்து உழைப்பதையே அவர்களுக்கான தனது அதியுயர் அற்பணமாக அவர் உணர்ந்தார். “மாவீரர்களும், போரில் கடுமையான விழுப்புண்களைத் தாங்கிய போராளிகளும்தான் உண்மையில் தேசத்திற்கான தமது கடமைகளை முழுமையாக நிறைவேற்றியவர்கள். நான்கூட அதனை இன்னமும் செய்யவில்லை. அதற்கு நான் ஒன்றில் எனது இலட்சியத்தை அடையவேண்டும். அல்லது அதற்காக எனது உயிரை அர்ப்பணிக்க வேண்டும்” என அண்ணை அடிக்கடி கூறுவதாக எங்களுக்குக் குறிப்பிடுவார்.


சாவிற்கு அருகாமையிலேயே எப்போதும் தமிழ்ச்செல்வண்ணையின் வாழ்விருந்தது. அவரோடு அருகிருக்கும் போராளிகளது வாழ்வும் அப்படித்தான். அவர் இராஜதந்திரத் தேவைகளுக்காக வெளிநாடுகளுக்குச் சென்றுவரும் காலங்களிலெல்லாம் உடனே தலைவரிடம் செல்வார். 

தலைவருடனான தனது உரையாடல்கள் முடிந்ததும் எப்போதும் எங்களுக்குப் பாரியவேலை இருக்கும். மாபெரும் அபாயங்கள் நிறைந்த எல்லைக் கிராமங்களில் மக்களின் குடிசை வாசல்களில் தமிழ்ச்செல்வண்ணை நிற்பார். நேற்றுத்தான் வெளிநாடுகளில் நிற்பதாக அறிந்த அவரைத் திடீரெனத் தமது வீட்டு வாசலில் கண்ட அதிர்ச்சி மக்கள் முகங்களில் தெரியும். அவரது மிகுதிநேர வாழ்வுபோர்க்களத்தில் இருக்கும்.

 தான் நேசித்த மக்களுக்காகத் தான் தழுவிக்கொள்ளும் சாவு போர்க்களத்தில் அமையவேண்டும் என்பது தமிழ்ச்செல்வன் அண்ணையினது ஆத்மாவில் ஆழ்ந்த படிமமாக இருந்ததை அவரோடு பழகிய அனைவரும் அறிவார்கள். அவரோடு கூடவே சென்றுவிட்ட தோழர்களும் அப்படித்தான். ஆனால்…


அழுகிறோம்… தேம்பித்தேம்பி அழுகிறோம்… உங்கள் சாவுக்காக அல்ல. நீங்கள் விரும்பாத வடிவத்தில் அது நேர்ந்துவிட்டதே என்பதற்காக. களத்தில் நீங்கள் வீழ்ந்திருந்தால் உங்களது ஆத்மா திருப்தி அடைந்திருக்கும். அதனால் நாங்களும் ஆறுதல் உற்றிருப்போம். ஆனால்…


தமிழ்ச்செல்வண்ணை நீங்கள் அடிக்கடி கூறுவீர்கள் “ஒருத்தன் தன்ர வாழ்கையில எப்ப திருப்தி அடையிறானோ அன்றோடு அவனது கதை முடிஞ்சிடும்” என்று. அதனை இப்போது நினைக்கின்றோம். உங்களது பயணம் தொடரும். எங்களின் அருகில் எப்போதும் நீங்கள் இருப்பீர்கள்.


நினைவுப்பகிர்வு:- அ.பார்த்தீபன்
விடுதலைப்புலிகள் (ஐப்பசி, கார்த்திகை 2007) இதழிலிருந்து.
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”
Starring
சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ்
Direction
பாக்கியராஜ் கண்ணன்
Music
அனிருத் ரவிச்சந்தர்

சிவகார்த்திகேயனுக்கு பெரிய நடிகராக வேண்டும் என்ற கனவு. ஆனால், அவருக்கு சரியாக வாய்ப்புகள் அமைவதில்லை.  கே.எஸ்.ரவிக்குமார் படத்துக்கு ஹீரோ தேர்வு செய்வதாக அறிந்து, அவரிடம் சென்று வாய்ப்பு கேட்கிறார்.

முதலில் காதல் காட்சியில் சிவகார்த்திகேயனை நடிக்கச் சொல்கிறார். ஆனால், அவருக்கோ ரொமான்ஸ் சுத்தமாக வருவதில்லை. இதனால், கே.எஸ்.ரவிக்குமார் சிவகார்த்திகேயனை நிராகரிக்கிறார். 

இருப்பினும், அவருக்கு நகைச்சுவை நன்றாக வருவதை உணர்ந்து தான் அடுத்ததாக எடுக்கும் ‘அவ்வை சண்முகி’ படத்தை பற்றி அவரிடம் சொல்கிறார். அந்த படத்தில் ஹீரோ லேடி கெட்டப்பில் நடிப்பதாகவும் சிவகார்த்திகேயனிடம் சொல்கிறார். அந்த படத்திலாவது வாய்ப்பு வாங்கிவிட வேண்டும் என்று சிவகார்த்திகேயன் நினைக்கிறார். 

கே.எஸ்.ரவிக்குமாரை பார்த்துவிட்டு திரும்பிவரும் வேளையில் கீர்த்தி சுரேஷை பார்க்கும் சிவகார்த்திகேயனுக்குள் கே.எஸ்.ரவிக்குமார் கேட்ட காதல், ரொமான்ஸ் எல்லாம் துளிர்விடுகிறது. எனவே, அவளை எப்படியாவது காதலிக்க வைக்கவேண்டும் என்று அவள் பின்னாலேயே சுற்றுகிறார்.

ஒருகட்டத்தில், கீர்த்தி சுரேஷை தேடி அவள் வீடு வரைக்கும் போகும் சிவகார்த்திகேயன், அங்கு கீர்த்தி சுரேஷுக்கு வேறொருவருடன் நிச்சயதார்த்தம் நடப்பதை பார்த்து அதிர்ச்சியாகிறார். 

இதற்கிடையில், சிவகார்த்திகேயன் லேடி நர்ஸ் கெட்டப்பில் சென்று கே.எஸ்.ரவிக்குமாரை கவர நினைக்கிறார். உடனே லேடி கெட்டப் போட்டு சென்று அவரிடம் சென்று நடித்துக்காட்டுகிறார். அப்படியும், கே.எஸ்.ரவிக்குமாருக்கு சிவகார்த்திகேயனின் நடிப்பு பிடிப்பதில்லை. இதனால், சோகத்தில் லேடி கெட்டப்பில் பஸ்ஸில் திரும்பும் சிவகார்த்திகேயனை யோகிபாபு சில்மிஷம் செய்கிறார். 

இதைப் பார்க்கும் கீர்த்தி சுரேஷ், சிவகார்த்திகேயனை லேடி என்று நினைத்து யோகி பாபுவிடமிருந்து காப்பாற்றுகிறாள். அவர் நர்ஸ் கெட்டப்பில் இருப்பதை பார்த்து தான் டாக்டராக பணிபுரியும் மருத்துவமனையிலேயே அவருக்கு வேலை வாங்கித் தருவதாக கூறுகிறார். இது தனக்கு கிடைத்த இரண்டாவது வாய்ப்பாக கருதி, அந்த கெட்டப்பிலேயே இருந்து அவள் மனதை மாற்றி திருமணத்தை தடுத்து நிறுத்த நினைக்கிறார்.
இறுதியில், சிவகார்த்திகேயன் லேடி கெட்டப்பில் இருந்து கீர்த்தி சுரேஷின் மனதை மாற்றி காதலில் ஒன்று சேர்ந்தாரா? சிவகார்த்திகேயனுக்கு சினிமாவில் வாய்ப்பு கிடைத்தா? என்பதே மீதிக்கதை. 

சிவகார்த்திகேயன் சாதாரணமாகவும் லேடி கெட்ப்பிலும் அசத்தலாகவும் அழகாகவும் இருக்கிறார். அதிலும், லேடி கெட்டப்பில் நர்ஸாக நடை, உடை, பாவனை எல்லாம் நன்றாக செய்திருக்கிறார்.

அதேபோல், இந்த படத்தில் ஆக்ஷன் காட்சியிலும் சிவகார்த்திகேயன் வெளுத்து வாங்கியிருக்கிறார். அதிலும், லேடி கெட்டப்பில் எதிரிகளை அடித்து துவம்சம் செய்துவிட்டு முகத்தில் விழுந்த முடியை ஊதிவிடும் காட்சிகளில் ரசிகர்களின் கிளாப்ஸ் தியேட்டரை அதிர வைக்கிறது. 

கீர்த்தி சுரேஷ் இதுவரையிலான படங்களில் ரொம்பவும் அழகாக இருந்தார். இந்த படத்தில் கூடுதல் அழகாக இருக்கிறார். சிவகார்த்திகேயன்-கீர்த்தி சுரேஷ் கெமிஸ்டரி ஏற்கெனவே ஒர்க் அவுட் ஆகியுள்ள நிலையில், இந்த படத்திலும் நன்றாகவே ஒர்க் அவுட் ஆகியிருக்கிறது. கீர்த்தி சுரேஷின் துருதுரு நடிப்பு ரசிகர்களை ரொம்பவும் கவர்ந்திருக்கிறது.


சதீஷின் காமெடி படத்திற்கு பெரிதளவில் கைகொடுத்திருக்கிறது. சரண்யா பொன்வண்ணன் வழக்கம்போல் காதலுக்கு பச்சை கொடி காட்டும் அம்மாவாக நடித்து அசத்தியிருக்கிறார். நான் கடவுள் ராஜேந்திரன், யோகி பாபு ஆகியோரின் காமெடியும் பரவாயில்லை. கீர்த்திசுரேஷின் அப்பாவாக வரும் நரேன் தனக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை சிறப்பாக செய்திருக்கிறார். 


இயக்குனர் பாக்கியராஜ் கண்ணன் முழுக்க முழுக்க ஒரு காதல் கதையை படமாக்கியிருக்கிறார். படத்தின் கதை முழுக்க சிவகார்த்திகேயன்-கீர்த்தி சுரேஷ் இருவரை மட்டுமே முன்னிருத்தி கதையை நகர்த்தியிருக்கிறார். மற்ற கதாபாத்திரங்களுக்கு அவ்வளவாக வாய்ப்பு வழங்கவில்லை.

அதேபோல் படத்தில் நிறைய லாஜிக் மீறல்களும் இருக்கிறது. சிவகார்த்திகேயன்-கீர்த்தி சுரேஷுக்கு கொடுத்த வாய்ப்பில் பாதியளவாவது மற்ற கதாபாத்திரங்களுக்கும் கொடுத்திருக்கலாம். அதேபோல், படத்தில் உள்ள லாஜிக் மீறல்களையும் தவிர்த்திருந்தால் படத்தை கூடுதலாக ரசித்திருக்கலாம். 

பி.சி.ஸ்ரீராமின் ஒளிப்பதிவு படத்திற்கு பக்கபலமாக இருக்கிறது. ஒவ்வொரு காட்சிகளையும் தனது கலைக் கண்ணால் வண்ணமயமாகவும், அழகாகவும் படமாக்கியிருக்கிறார். அனிருத்தின் இசையும் படத்திற்கு கூடுதல் பலமாக இருக்கிறது.

ரசூல் பூக்குட்டி, சிவகார்த்திகேயனின் குரலை அழகான பெண் குரலாக மிகவும் நேர்த்தியாக மாற்றியிருக்கிறார். முத்துராஜின் அரங்குகள் அருமையாகவும், பிரம்மாண்டமாகவும் இருக்கிறது. 

மொத்தத்தில் ‘ரெமோ’ ஜொலிக்கிறான்.



Tags:remo,sivakarthikeyan,keerthy suresh,sathish,Remo movie review,remo movie,remo move hd,hd tamil movie,tamil movie ,remo tamil movie



Selva mugunthan ,Star Selva mugunthan ,Lyricswriter Selva mugunthan  ,Actor Selva mugunthan , Announcer Selva mugunthan , Director Selva mugunthan ,srilankan Lyricswriter ,Actor, Announcer, Director,Selva mugunthan,srilankan acteor Selva mugunthan,Switzerland tamil acteor Switzerland,tamil Switzerland,tamil Lyricswriter Selva mugunthan ,srilankan tamil Lyricswriter Selva mugunthan ,tamil Lyricswriter Selva mugunthan cinema Lyricswriter Selva mugunthan

Name              - Selva mugunthan 

Date Of Birth   - 19 October 1987

Birth Place       - Jaffna

Living  Place   - Switzerland

Professional    -  Lyricswriter ,Actor, Announcer, Director




















Tags:Selva mugunthan ,Star Selva mugunthan ,Lyricswriter Selva mugunthan  ,Actor Selva mugunthan , Announcer Selva mugunthan , Director Selva mugunthan ,srilankan Lyricswriter ,Actor, Announcer, Director,Selva mugunthan,srilankan acteor Selva mugunthan,Switzerland tamil acteor Switzerland,tamil Switzerland,tamil Lyricswriter Selva mugunthan ,srilankan tamil Lyricswriter Selva mugunthan ,tamil Lyricswriter Selva mugunthan cinema Lyricswriter Selva mugunthan 



பலாலியில் பலியாகி தீருவில்வெளியில் தீயுடன் கலந்துவிட்ட பன்னிரு வேங்கைகளின் பத்தாவது ஆண்டை முன்னிட்டு இக்கட்டுரை வெளியிடப் படுகின்றது.

தமிழீழ போராட்டத்தின் மூத்ததளபதிகளும் போராளிகளும் இந்திய – இலங்கை அரசுகளின் கூட்டுச்சதியால் கைதாகி கொழும்புக்கு அழைத்துச் செல்லப்பட்டபோது எதிரியின் கபட நாடகத்தை அம்பலப்படுத்தி விடுதலைப் போராட்டத்தில், கொல்லும் சயனைட் வில்லையை மகிழ்வுடன் உண்டு தம் உடல்களை தாயக மண்ணிற்காக உரமாக்கினார்கள்.

இரு தளபதிகளும் மணமாகி மணமாலை வாடுமுன்பு தாய், தாரம் இரண்டையும் விட உயிரிலும் மேலான தாயக விடுதலையையும் மக்களையும் நேசித்தவர்கள் . இந்நிகழ்வு தமிழீழப் போராட்டத்தின் முக்கியமான திருப்புமுனையாகும். அத்துடன் தமிழீழ போராட்டத்திற்கு உத்வேகம் அளித்து புத்துயிர் பெறச்செய்தது .

29.07.1987 மாலை 6.15 மணிக்கு தமிழீழ தேசத்திற்கு இந்திய இராணுவத்தை ஏற்றி வந்த முதல் விமானம் தரையிறக்கப்பட்டது .

05.10.1987 பிற்பகல் 5.05 மணிக்கு பலாலி இராணுவ முகாமில் புலேந்திரன், குமரப்பா, அப்துல்லா, மிரேஸ், நளன், அன்பழகன், ஆனந்தக்குமார், ரெஜினோல்ட், பழனி, கரன், தவக்குமார், ரகு, தமீம், கருணா, கரன், தாஸ், செல்வா, சிவகுமார் ஆகிய 17 போராளிகள் சயனைட் உட்கொண்டனர் . இவர்களில் முதல் 11 பேரும் வீரச்சாவைத் தழுவிக்கொண்டனர்.


ரகு ஆபத்தான நிலையிலிருந்து அடுத்த நாள் வீரச்சாவைத் தழுவிக் கொண்டான் . வீரச்சாவைத் தழுவிக்கொண்ட புலேந்திரன் மணமுடித்து இரு மாதங்கள்தான் – குமரப்பா மணமுடித்து ஒரு மாதம் – கரன் இரு குழந்தைகளின் தந்தை . உயிர் பிழைத்த ஏனைய ஐவரும் நீண்டகால சித்திரவதையின் பின் விடுவிக்கப்பட்டனர்.

03.10.1987 அன்று எமது கடற்பரப்பில் இப் பதினேழு போராளிகளும் சிறிலங்கா கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர் . இவர்கள் தமிழகத்திலிருந்து எமது அலுவலக ஆவணங்களை படகில் ஏற்றி வரும் போதே கைதாகினர்.
கைதானவர்களில் ஒருவர் புலேந்திரன் என்று தெரிந்ததும் , சிறிலங்காவின் தேசிய பந்தோபஸ்து அமைச்சர் லலித் அத்துலத் முதலி துள்ளிக் குதித்தார் . சிறிலங்கா வானொலி புலேந்திரனுக்கு கொலைகாரப்பட்டம் சுமத்தி, இவ்வாறான ஒரு பயங்கர குற்றவாளியை கைது செய்துள்ளோம் என பெருமை பேசியது . ‘இவர்கள் ஆயுதங்களுடன் காணப்பட்டதாலேயே இவர்களைக் கைது செய்ய வேண்டியேற்பட்டது’ என்று நியாயமும் கூறியது.
இவர்கள் பலாலி இராணுவ முகாமில் ஒப்படைக்கப்பட்டனர் . இவர்கள் கைது செய்யப்பட்டது பற்றி , தலைவர் பிரபாகரன் இந்திய அரசிடம் தமது கடுமையான ஆட்சேபத்தைத் தெரிவித்தார் . 

இது பற்றி 05.10.1987 அன்று தமிழீழத்தில் வெளிவந்த ஈழமுரசு செய்தி இதழில் பின்வருமாறு தலைவர் தெரிவித்ததாக வெளியிடப்பட்டிருந்தது. ‘ஆயுதங்களை கையளித்த பின் எமக்குப் பொது மன்னிப்பு வழங்கப்பட்டதாக பகிரங்கமாக அறிவிக்கப்பட்டது . இந்நிலையில் பொதுமன்னிப்பு வழங்கப்பட்ட போராளிகளைக் கைது செய்வதும், தடுத்து வைப்பதும் இந்திய – இலங்கை ஒப்பந்தத்திற்கு முற்றிலும் முரணானதாகும்’.


எமது போராளிகள் இதுவரை எதுவித குற்றமும் இழைக்கவில்லை. குற்றமிளைக்காதவர்களை கைது செய்ய முடியுமா?’

ஒரு மீனவத் தொழிலாளி தனது தொழிலைச் செய்ய கடலில் செல்லும் உரிமையைப் போன்றதான செயலைத்தவிர எமது போராளிகள் வேறு எதனைச் செய்தார்கள்?

நமது பிரதேசத்துக் கடலில் நாம் சுதந்திரமாகச் செல்லக் கூடாதா ? எமது இந்தச் சுதந்திரம் பறிக்கப்படக்கூடிய ஒன்று என நாம் கருதவில்லை . வெளிநாடு செல்ல விமானத்தில் பறப்பது போன்றே கடலில் படகில் செல்வதற்கான உரிமையும் என்பதனை எவரும் மறுக்க முடியாது.

இது போன்றதே நடந்த சம்பவமாகும் . இந்தியாவில் உள்ள எமது தலைமைக் காரியாலயத்தை மூடிவிட்டு அங்கிருந்த தஸ்தாவேஜுகளையும் பிற ஆவணங்களையும் எடுத்து நம் பிரதேசத்திற்கு கொண்டுவர இந்திய கடற்படையிடம் பாதுகாப்பும் , அனுமதியும் கேட்டோம் . பலதடவை கேட்டோம் . ஆனால் தரப்படவில்லை . எனினும் பொருட்களை எடுத்து வருவது பற்றி இந்திய அரசுக்கு அறிவித்திருந்தோம்.


இந்நிலையில் பொருட்களை இந்தியக் கரையில் எடுத்து வைத்து விட்டு பின் அவைகளில் ஒரு பகுதியை வள்ளத்தில் கொண்டு வந்து நமது பிரதேசத்தில் இறக்கிவிட்டு மீண்டும் மீதிப் பொருட்களை எடுத்து வர வள்ளத்தில் சென்றபோதே கைது சம்பவம் இடம்பெற்றது.


தளபதிகள் தற்பாதுகாப்புக்காக கைத்துப்பாக்கி வைத்திருக்க அனுமதிக்கப்பட்டது . இதனையே தளபதிகள் இருவரும் கொண்டு வந்தனர் . ஆனால் சிறிலங்கா அரசின் வானொலி , தொலைதொடர்பு சாதனங்கள் , ஆயுதங்களைக் கொண்டு வந்ததாகப் பிரச்சாரம் செய்கின்றன.


ஆயுதங்களை ஒப்படைத்த பின் எமது பாதுகாப்புக்களை இந்தியப்படையிடம் ஒப்படைத்தோம் . எம்மை யாரவது கைது செய்வதை தடுக்கவேண்டியவர்கள் அவர்களே . எமக்கு பாதுகாப்பு வழங்க வேண்டியவர்களும் அவர்களே.


தமிழ் மக்களின் பிரதிநிதிகளாக இந்தியா எம்மை அங்கீகரித்தது . இவ்வாறு நிலைமை இருக்கும் போது சிறிலங்கா அரசு எம்மைக் கைது செய்யும் கட்டத்தில் இந்தியாவே எம்மை பாதுகாத்துக்கொள்ள வேண்டிய கடமைப்பாட்டுக்குரியது . தவறின் அது ஆபத்துக்குரியதாகும்.


தலைவர் அவர்களின் வேண்டுகோளானது அலட்சியம் செயப்பட்டது . கைதானவர்களை கொழும்புக்கு கொண்டு செல்வது பற்றி இரு அரசுகளும் ஆராய்ந்தன.


இந்நிலையில் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்திக்கு தலைவர் அவர்களால் ஒரு செய்தி அனுப்பப்பட்டது.


இச்செய்தியை இலங்கைக்கான இந்திய தூதுவரான டிக்சித்துடன் ஆலோசித்த ராஜீவ் , பின்னர் டிக்சித் ஊடாக சில நிபந்தனைகளை உள்ளடக்கிய தனது செய்தியை அறிவித்தார் . அச்செய்தியில், ‘புலிகளுடனான போரில் கைதாகி , புலிகளின் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருக்கும் சிறிலங்கா இராணுவத்தினர் விடுதலை செய்யப்பட வேண்டும். ஜே . ஆர் விரும்பியவாறு இடைக்கால நிர்வாகத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும்’ எனும் நிபந்தனைகள் உட்பட்ட வேறு சில நிபந்தனைகளும் அடங்கியிருந்தன.


இவ் நியாயமற்ற நிபந்தனைகளை விடுதலைப் புலிகள் ஏற்றுக்கொள்ளவில்லை. இது , தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் உறுதித்தன்மையை உலகிற்கு எடுத்தியம்பியது.

‘‘இது பேரங்களிற்கு மசியாது , எனவே இதை அழிப்பதைத் தவிர வேறு வழியில்லை. இல்லையேல் இந்தியாவின் பிராந்திய நலனைப் பேணமுடியாது!’’

என்ற முடிவுக்கு வந்தது இந்திய அரசு.

அதன் முதற்கட்ட பலியாக கைதான 17 விடுதலைப் புலிகளையும் தேர்ந்தெடுத்தது.

‘‘தளபதிகள் இருவரும் அண்மையிலேயே திருமணமானவர்கள் . எனவே வாழ்க்கையில் பற்றுக் கொண்டிருப்பார்கள். இவர்களிடம் இந்திய பிரதமரின் நிபந்தனைகளைக் கூறுவோம். இவர்கள் கைதிகளை விடுவிப்பதற்கு சம்மதித்தால் , அதனைப் பிரச்சாரப்படுத்துவோம்’’ எனக்கருதிய இந்திய இராணுவத்தினர் முதலில் புலேந்திரனை அணுகினர் . பிரதமர் ராஜீவின் நிபந்தனைகளை தெரிவித்தனர்.


அதற்கு புலேந்திரன், ‘‘சிறிலங்கா இராணுவத்தினர் எம்மோடு யுத்தத்தில் ஈடுபட்ட வேளையில் யுத்தக் கைதிகளாகக் கைது செய்யப்பட்டவர்கள். நாம் சமாதான ஒப்பந்தத்தின் பின் கைது செயப்பட்டவர்கள். எனவே இவ்விரண்டையும் ஒப்பிட முடியாது . தமிழீழ இலட்சியத்திற்காகப் போராடும் எம்மை வைத்து இடைக்கால நிர்வாக சபை குறித்துப் பேரம் பேசுவதை ஏற்றுக் கொள்ள முடியாது’’ என திட்டவட்டமாகத் தெரிவித்தார் – ( ஈழமுரசு 06.10.1987).

இந்திய – சிறிலங்கா அரசுகள் ஒரு முடிவுக்கு வந்துவிட்டன.
05.10.1987.

அன்று மிக விரைவாகச் சம்பவங்கள் நடந்தன . தென்பிராந்தியத் தளபதி திபேந்தர் சிங்; பின்பு இந்திய தூதர் டிக்சிற் சிறிலங்கா ஜனாதிபதியுடன் பேசுவதாகவும், விரைவில் சுமுகமான முடிவு வரும் என்றும் தெரிவித்தார்.

புலேந்திரன் தலைவருக்காக தனது இறுதிக் கடிதத்தை வரைந்தார். அதே போல் குமரப்பாவும் தனது இறுதிக் கடிதத்தை எழுதினார் . ஏனைய போராளிகளும் கூட்டாக தமது இறுதிக் கடிதத்தை வரைந்தனர்.

மூன்று கடிதங்களினதும் சாராம்சமும் ஒன்றுதான் . தம்மைக் கொழும்புக்குக் கொண்டு செல்ல முயன்றால் தம்மைத் தாமே அழித்துக் கொள்ளப் போவதாக அறிவித்திருந்தனர்.

விடுதலைக்கான காலக்கெடு 7:00 மணியிலிருந்து 10:00 மணியாகியது . பின்பு பிற்பகல் 2:00 மணியாகியது . ஆயினும் 2:00 மணி கடந்த பின்பும் பதினேழு வேங்கைகளும் விடுதலை செய்யப்படவில்லை.

தலைவர் குறிப்பிட்டது போல் சிங்கள இனவாதம் இந்த ஒப்பந்தத்தை விழுங்கும் நேரம் நெருங்கியது . பிற்பகல் 5:05 மணிக்கு நாம் அவர்களை இழந்தோம். வீரச்சாவெய்தும் இறுதி மணித்துளிவரை அவர்கள் போராடினார்கள்.

சயனைட் உட்கொண்டவர்கள் , உயிர் பிரிந்த பின்னர் கூடத் தாக்கப்பட்டார்கள். புலேந்திரன் உடலில் தெரிந்த காயங்கள் இன்னொரு ‘வெலிக்கடையை’ ஞாபகப்படுத்தியது . காயத்துடன் காணப்பட்ட சடலங்களில் ரகுவினுடையதும் ஒன்று.

வல்வை – தீருவில், 07.10.1987 அன்று பன்னிரு வேங்கைகளினதும் புகழுடல்கள் வரிசையாக அடுக்கப்பட்டிருந்தன . இவர்களுக்கு ஆயுத பாணியாக வந்து அஞ்சலி செலுத்தினார் தலைவர் அவர்கள்.

ஒப்பந்தம் உருவாகிய சில நாட்களில் தமிழகத்தைச் சேர்ந்த திரு பழ. நெடுமாறன் அவர்களிடம் ‘‘இந்நிலையில், தமிழீழ கோரிக்கை பற்றி ஈழத்தமிழ் மக்களின் கருத்தென்ன ?” என்று கேட்டனர் பத்திரிகையாளர்கள் . அதற்கு அவர் ‘‘அது அணைந்துவிடவில்லை – நீறு பூத்த நெருப்பாக இருக்கின்றது அது எப்போதும் பற்றிக் கொள்ளலாம்” என்றார்.

ஆம் , நீறு பறந்தது ! நெருப்பு பற்றிக் கொண்டது.

தமது பிள்ளைகளுக்கான இறுதிக் கடன்களைச் செய்வதற்காக நாற்காலிகளில் வரிசையாக இருத்தப்பட்ட பன்னிரு வேங்கைகளினதும் பெற்றோர்களைப் பார்க்கையில் எமது மக்களின் வயிற்றில் பற்றியெரிந்த நெருப்பு – நான்கு அடி உயரமான சிதையில் பன்னிரண்டு மாவீரர்களையும் வரிசையாக அடுக்கி வைத்து மூட்டிய பெரு நெருப்பு – திரு. நெடுமாறனின் கூற்றை நிரூபித்தது.

நன்றி : ”தீருவில் தீ ”
வெளியீடு மாவீரர் பணிமனை – 1992

தீயினில் எரியாத
தீபங்களே !
எம் தேசத்தில்
நிலையான வேதங்களே!
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”
மூத்த தளபதிகள் லெப். கேணல் குமரப்பா, லெப். கேணல் புலேந்திரன் உட்பட பன்னிரு வேங்கைகளின் வீரவணக்க நாள் இன்றாகும்.




தமிழீழக் கடற்பரப்பில் வைத்து கைதுசெய்யப்பட்டு யாழ். மாவட்டம் பலாலி படைத்தளத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இவர்களை கொழும்பிற்கு கொண்டு செல்வதற்கு சிறிலங்கா – இந்தியப் படைகள் மேற்கொண்டிருந்த கூட்டுச் சதியினை முறியடிக்க 05.10.1987 அன்று சயனைட் உட்கொண்டு வீரச்சாவைத் தழுவிக்கொண்ட மூத்த தளபதிகள் “யாழ். மாவட்ட சிறப்புத் தளபதி” லெப். கேணல் குமரப்பா, “திருமலை மாவட்ட சிறப்புத் தளபதி” லெப். கேணல் புலேந்திரன் உட்பட பன்னிரு வேங்கைகளின் 28ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.















யனைட் உட்கொண்ட நிலையில் மருத்துவமனைக் கொண்டு செல்லப்பட்டு பண்டுவம் அளிக்கப்பட்ட போது 06.10.1987 அன்று பன்னிரு வேங்கைகளில் தானும் ஒருவனாக...


தாயக விடுதலை வேள்வி தன்னில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை மக்களைக் காத்த மாவீரர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…!

புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்



தனது முன்னாள் காதலர் சல்மான் கானுடன் சேர்ந்து நடிக்க தயார் என நடிகை ஐஸ்வர்யா ராய் பச்சன் தெரிவித்துள்ளார். 

பாலிவுட் நடிகர் சல்மான் கானும், ஐஸ்வர்யா ராயும் ஒரு காலத்தில் காதலித்ததும், பின்னர் பிரிந்துவிட்டதும் அனைவருக்கும் தெரிந்தது தான். அவர்கள் காதலர்களாக இருந்தபோது படங்களில் சேர்ந்து நடித்தார்கள். 

அதன் பிறகு சேர்ந்து நடிக்கவில்லை. ஏன் ஏதாவது நிகழ்ச்சிகளில் பார்த்தால் கூட முகத்தை திருப்பிக் கொண்டு சென்றுவிடுகிறார்கள்.

ஏ தில் ஹை முஷ்கில்


 கரண் ஜோஹார் இயக்கத்தில் ஐஸ்வர்யா ராய், ரன்பிர் கபூர் நடித்துள்ள ஏ தில் ஹை முஷ்கில் படத்தில் பாகிஸ்தானை சேர்ந்த பவாத் கான் நடித்துள்ளார். பாகிஸ்தான் நடிகர்கள் நடித்த படங்களை திரையிடக் கூடாது என மகாராஷ்டிரா நவநிர்மன் சேனா தியேட்டர் உரிமையாளர்களிடம் தெரிவித்துள்ளது.

சல்மான் கான் 

ஏ தில் ஹை முஷ்கில் படத்திற்கு பிரச்சனை ஏற்பட்டுள்ளது பற்றி அறிந்த சல்மான் கான் அதை ரிலீஸ் செய்ய உதவி செய்து வருகிறாராம். ஐஸ்வர்யாவின் படத்தை ரிலீஸ் செய்ய சல்மான் உதவுவதை பாலிவுட்காரர்கள் பாராட்டுகிறார்கள்.

ஐஸ்வர்யா ராய் 

தனது முன்னாள் காதலர் சல்மான் கானுடன் சேர்ந்து நடிக்க தயார் என்றும், ஆனால் கதையும், இயக்குனரும் வழக்கத்தை விட அற்புதமாக இருந்தால் மட்டுமே நடிப்பதாகவும் ஐஸ்வர்யா ராய் தெரிவித்துள்ளார்.

பிக் பாஸ் 

சல்மான் கான் நடத்தும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஏ தில் ஹை முஷ்கில் படத்தை விளம்பரப்படுத்த ஐஸ்வர்யா ராய் வருவார் என ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள். சஞ்சய் லீலா பன்சாலியின் இயக்கத்தில் அவர்கள் சேர்ந்து நடித்த ஹம் தில் தே சுகே சனம் இன்றும் ரசிகர்கள் மத்தியில் பிரபலம்.


Bollywood actress Aishwarya Rai said that she is ready to share screen space with former lover Salman Khan on one condition.


Tag: aishwarya rai, salman khan, bollywood, ஐஸ்வர்யா ராய், சல்மான் கான், பாலிவுட்

Picture of the Day Radhika Apte Hot Photoshoot Stills,Radhika Apte ,Radhika Apte hot photos,Radhika Apte sexy photos


Tags : Picture of the Day Radhika Apte Hot Photoshoot Stills,Radhika Apte ,Radhika Apte hot photos,Radhika Apte sexy photos

பார்ன் என்பதும் ஒரு தொழில் தான், என்னை விபச்சாரி மாதிரி பார்ப்பதை நிறுத்துங்கள் என ஒரு பேட்டியில் கண்ணீர் மல்க கூறியிருந்தார் சன்னி. சரி, இப்போது நடிக்க வந்த பிறகும் பார்வையாளர்கள் அதே கண்ணோட்டத்தில் பார்க்க காரணம், இப்போதும் சன்னி அதே போன்ற கதைகளை தேர்வு செய்வது தான்.

 தொடர்ந்து இவர் நடிக்கும், நடித்து வெளியான படங்கள் யாவும் இவரை ஒரு காட்சிப்பொருளாக பயன்படுத்தி வியாபாரம் செய்யப்படுபவை தான். பார்ன் என்பதை தாண்டி வந்த பிறகும் சன்னி சில தவறுகள் செய்து தான் வருகிறார்....

ஐட்டம் கதாபாத்திரங்கள்! 

ஏற்கனவே பார்ன் படங்களில் துகிலுரித்து வந்தவர் தான். பிறகு மீண்டும் இவரை கவர்ச்சிக்காக மட்டும் பயன்படுத்திக் கொள்வதில் எந்த பயனும் இல்லை. இதை சன்னியும் உணர வேண்டும். நடிப்பில் உண்மையிலேயே ஆர்வம் இருந்தால், அதில் திறமை காட்டுவதே நல்லது.


கற்றுக்கொள்ள வேண்டும்! 

நிஜமாகவே நடிப்பில் சிறக்க வேண்டும் என்றால் சன்னி தயவு செய்து நடிப்பு கிளாசுக்கு போகலாம். இவரை வைத்து எடுக்கப்படும் விளம்பரங்கள் கூட அந்த மாதிரி தான் எடுக்கபப்டுகின்றன.


நைட் பார்ட்டி! 

நடிப்பு என்ற தொழிலுக்குள் வந்த பிறகு மீண்டும் ஒருசில நைட் பார்டிகளில் ஆடைகள் அவிழ்த்து சன்னி நடனம் ஆடியதாக பல படங்கள் வெளியாகின. இதை சன்னி தவிர்த்திருக்க வேண்டும்.


குச் குச் லோச்சா ஹை! 

குச் குச் லோச்சா ஹை என்ற இந்தி படத்தில் சன்னி நடித்திருந்தார். இதைவிட ஒரு கேவலமான படம் இல்லை என்றே கூறும்படி இருந்தது. உலக சினிமா ரேட்டிங் தளமான IMDb இதற்கு வெறும் மூன்று மதிப்பெண் கொடுத்திருந்தது.


ஏக் பஹீலி லீலா! 
இது சன்னி செய்த இரண்டாவது பெரிய தவறு. ட்ரைலரில் ஒரு மாதிரியும், திரையில் வேறு ஒரு மாதிரியாகவும் இருந்தது கதை. ஒட்டு மொத்தமாக கதையின் நாயகியை சுயநலத்திற்காக பயன்படுத்தியது மாதிரியே இருந்தது. 



ஜாக்பாட்! 
இதுவும் சன்னி நடித்த வேண்டாத படங்களில் ஒன்று. இதற்கு IMDb 2.3 மதிப்பெண் அளித்திருந்தது.

Biggest Mistakes of Sunny Leone’s Career Biggest Mistakes of Sunny Leone’s Career, take a look on here

Tags :Sunny Leone,Sunny Leone photos,Sunny Leone,indian stars 



நடிகர் திலகம் சிவாஜி கணேசனை 1967 ம் ஆண்டு பொம்மை சினிமா இதழுக்காக இன்றைய முதல்வர், அன்றைய முன்னணி நாயகி ஜெயலலிதா ஒரு நேர்காணல் செய்துள்ளார். 

ஒரு தேர்ந்த பத்திரிகையாளரைப் போல ஜெயலலிதா எழுப்பிய கேள்விகளுக்கு, தனக்கே உரிய பாணியில் பதிலளித்துள்ளார் நடிகர் திலகம். 

சுவாரஸ்யமான அந்தப் பேட்டி... 
ஜெயலலிதா: உங்க பெயருக்கு முன்னாலே சிவா‌ஜின்னு ஒரு பட்டம் சேர்ந்திருக்கிறதே, அது எப்படி வந்தது?

சிவா‌ஜி: அதுதான் ஊர் அறிஞ்சதாச்சே. 

ஜெயலலிதா: எனக்குத் தெ‌ரியாதே. அதனாலே... 

சிவா‌ஜி: அப்போ ச‌ரி. சொல்லிட வேண்டியதுதான். ஏழாவது சுயம‌ரியாதை மகாநாட்லே சத்ரபதி சிவா‌ஜி நாடகம் நடந்தது. பெ‌ரியார் அவர்கள் மகாநாட்டுக்கு தலைமை வகிச்சாங்க. நாடகத்திலே சிவா‌ஜியாக நடிச்ச என்னைப் பார்த்து பாராட்டிவிட்டு, சிவா‌ஜிங்கிற பட்டத்தையும் கொடுத்தாங்க. அன்னேலேர்ந்து சிவா‌ஜி கணேசனாயிட்டேன்.


ஜெயலலிதா: லைலா - ம‌ஜ்னு, ரோமியோ - ஜுலியட் போன்ற இலக்கியங்கள்ளே வரும் காதலர்களைப் பற்றி படிச்சிருப்பீங்க. அந்த மாதியான காதலருங்க இருந்திருப்பாங்கன்னு நீங்க நினைக்கறீங்களா?

சிவா‌ஜி: காதலிச்சா அந்த மாதி‌ரி காதலிக்கணும் என்கிறதுக்காகத்தான் எழுதியிருக்காங்க. கொஞ்ச நாள் காதலிச்சிட்டு, கைவிட்டுட்டுப் போகக் கூடாது. காதல் என்பது கடைசிவரைக்கும், உயிர் போனா கூட இருக்கணும்னு சொல்றதுக்காகதான் இது. நாடகமும், சினிமாவும், இந்த மாதி‌ரி கதைகளும் வெறுமே படிச்சிட்டு விடறதுக்காக இல்லே.

 ஜெயலலிதா: அம்மாதி‌ரியான காதலர்களை இப்போதுள்ள உலகத்திலே காண முடியும்னு நம்பறீங்களா?


சிவா‌ஜி: நான் காதலிச்சது கிடையாது. இப்போ நீ தனி ஆள். இனிமேதான் நீ காதலிக்கப் போறே. நீதான் சொல்லணும். 

ஜெயலலிதா: வேறு வழியே கிடையாது என்ற நிலைக்கு வரும்போது, தற்கொலையைத் தவிர, வேறு நிலை இல்லை என்ற சூழ்நிலைக்கு வரும் போது ஒருவர் தற்கொலை செய்து கொள்றது பற்றி என்ன சொல்லுறீங்க? 

சிவா‌ஜி: தற்கொலை கோழைத்தனம் மட்டும் இல்லே, அது பெ‌ரிய தவறும்பேன். ஜெயலலிதா: நான்தான் வேறு வழியே இல்லேன்னு சொல்லிட்டேனே. உதாரணமா ஒரு பெண் இருக்கா. அவ கணவனால் கைவிடப்பட்டு விடறா... அவளுக்கு படிப்பும் கிடையாது, என்ன செய்வாள்? 

சிவா‌ஜி: பாத்திரம் தேய்க்கிறது, மூட்டைத் தூக்கறது, ஏதாவது நாணயமா வேலை செஞ்சு பிழைக்கிறது. வேலை இல்லாதவங்க, படிக்காதவங்க எல்லாரும் செத்தாப் போயிட்டாங்க? 

ஜெயலலிதா: சின்ன வயசிலே நீங்க நாடக மேடையில் நடிக்க ஆரம்பிச்சீங்க-இல்லையா?அப்போ ஏதாவது நினைச்சதுண்டா.அதாவது எதிர்காலத்தை பற்றி.இப்படி ஒரு நடிகரா வருவோம்னு நினைச்சதுண்டா?

சிவாஜி: இப்படி ஒரு நடிகனாகிவிடுவேன்னு கனவுகூட கண்டதில்லை. நடிக்க வேண்டும்கிற ஒரே ஆர்வம் தான் என்னை மேடைக்கு துரத்திச்சு. தவிர, வருங்காலத்தைப் பற்றியோ,எதிர்காலத்தைப் பற்றியோ நினைக்க முடியாத நிலை. அப்போது அடுத்தவேளை சோத்துக்கே என்ன செய்யறது? எங்கே போறது என்ற நிலையில் எதிர்காலத்தைப் பற்றி நான் நினைக்கலே. அதுக்கு நேரமே கிடைக்கலேன்னு சொல்வேன். 


ஜெயலலிதா: நடிகர்கள் அரசியலில் பங்கெடுத்துக் கொள்ளவேணும்னு நீங்க நினைக்கிறீங்களா?அப்படி நடந்தால் தங்களது தொழிலுக்கும் அரசியலுக்கும் சமமான வகையில் பணியாற்ற முடியும்னு நினைக்கிறீங்களா?

 சிவாஜி: அரசியல் வேறு, நடிப்பு வேறு. நடிகனாக இருப்பவன் நடிப்புக்குத்தான் முதலிடம் தரவேணும். நான் ஒரு அரசியல் கட்சியில் இருப்பதால் நான் முழுக்க முழுக்க அரசியலிலேயே இருக்க வேண்டும்னு அந்த கட்சியும் விரும்பாது. ஆனால் கட்சியில் இருப்பதாலே சில கடமைகள் அவனுக்கு உண்டு. சில கடமைகளை அவனிடமிருந்து எதிர்பார்க்கவும் கட்சிக்கு உரிமை உண்டு. உதாரணமா எனக்கு இரண்டு மாசம் ஓய்வு கிடைக்குதுன்னு வச்சுக்குவோம். ஒரு மாசம் நான் ஓய்வு எடுத்துக்கலாம். ஒரு மாசம் கட்சிக்காக உழைக்கலாம். ஆனா கட்சி வற்புறுத்தாது. எப்பவும் வரலாம், போகலாம். அதனால கட்சி, நடிப்பு இரண்டுக்கும் முடிச்சுப் போடக்கூடாது. அது வேறு, இது வேறு.



ஜெயலலிதா: தமிழ் படங்கள் இப்போ முன்னேறியிருப்பதா நினைக்கிறீங்களா?அல்லது தரம் குறைந்து விட்டதாக எண்ணுகிறீர்களா? 

சிவாஜி: எல்லாத் துறையிலும் நிச்சயமாக முன்னேற்றம் அடைஞ்சிருக்கு. அதேசமயம் சில படங்கள் மக்களது ரசனையை குறைச்சிடும் போலிருக்கு. இந்த மாதிரிப் படங்கள் நூற்றுக்கு இருபத்தஞ்சு இருக்கும்.ஆக நாம் மேலே ஏறினால்,இந்தப் படங்கள் கொஞ்சம் நம்மை கிழே இழுத்து விட்டுடுது.

ஜெயலலிதா: எப்படி? 

சிவா‌ஜி: இப்ப நீங்கள்ளாம் கால் சராய் போட்டு நடிக்க வந்துட்டதனாலேதான். 

ஜெயலலிதா: தயா‌ரிப்பாளர்கள் அப்படி போடச் சொல்றாங்களே. 

சிவா‌ஜி: ஜனங்களோட வீக்னஸை தயா‌ரிப்பாளர்கள் பயன்படுத்திக்கிறாங்க. நீங்க இன்னும் கொஞ்சம் பிகு வாக இருக்கலாம். 

ஜெயலலிதா: பிகுவாக இருந்தால், நீங்க வேண்டாம்னு சொல்லிவிடுவீங்களே. புதுசா வரும் நடிகைங்க என்ன செய்வாங்க? எதிர்க்க முடியுமா? 

சிவா‌ஜி: தப்பு. கால்சராய் போட மாட்டோம்னு சொன்னோம். வேண்டாம்னு தயா‌ரிப்பாளர் சொல்லிட்டாருன்னு வெளியே தெ‌ரிஞ்சா, தயா‌ரிப்பாளரைத்தான் திட்டுவாங்க. 

ஜெயலலிதா: மிகுந்த திறமைசாலிகளுக்கும் சிலசமயம் அவங்க மேற்கொண்டு இருக்கும் தொழிலிலேயே சவாலாக சில விசயங்கள் முளைச்சிடும். அதுபோல சிறந்த நடிகரான உங்களுக்கே,சவாலா இருந்த வேஷம் எது? 

சிவாஜி: நல்ல கேள்வி. கப்பலோட்டிய தமிழனாக நடிச்சேனே, அதுதான் உண்மையிலேயே எனக்கு சவாலாக இருந்த வேடம். ஏன்னா கப்பலோட்டிய அந்த பெருமகனாரை நேரில் பார்த்த பலர் இன்னைக்கும் நம்மோடயே இருந்துக்கிட்டிருக் காங்க. கதைக்குள்ள வரும் பாத்திரங்களை ஏற்று நடிப்பது சுலபமான காரியம். ஆனால் நமது வாழ்க்கையில் சந்தித்த, அதுவும் சமீப காலம் வரைக்கும் இருந்த ஒரு பெரிய மனிதரைப் போல நடிக்கிறோம் என்று சொல்றபோது, அந்த நடிப்பை எல்லோரும் ஏத்துக்கணும். அதிலே மாறுபாடு எழக்கூடாது. பெரியார் அவங்களைப் போல நடிக்கிறோம் என்றால், பாக்கிறவங்க 'பெரியாரைப் பார்ப்பதுபோலவே இருந்ததுன்னு சொல்லணும். அப்போதான் நடிப்பு பூரணத்துவம் பெறும். அந்த மாதிரியான ஒண்ணுதான் இந்தக் கப்பலோட்டிய தமிழன் வேஷம். இதில் நான் நடிச்சதைப் பார்த்துட்டு, அந்தப் பெரியவர் வ.உ.சி.யின் மகன் 'என் அப்பாவை நேரில் பார்த்ததுபோல இருந்தது' என்று சொன்னார். ஒரு வெற்றியாகத்தான் நான் இதைக் கருதுகிறேன். 

ஜெயலலிதா: சில நாவல்கள் படிக்கிறோம், கதைகளைக் கேட்கிறோம். ஆஹா!அந்த மாதிரி வேஷம் நமக்கு வரக் கூடாதா? கிடைக்காதா? என்று நினைக்கிறோம். அந்த மாதிரி நீங்க எதிர்பார்த்து நடிச்ச வேஷம் ஏதேனும் இருக்கா? 


சிவாஜி: கட்டபொம்மன் வேஷம் அப்படிப்பட்டது. கட்டபொம்மன் கதையை தெருக்கூத்தா நான் பார்த்தேன். நான் வீட்டை விட்டு நாடகத்தில் போய்ச்சேர தூண்டுதலாக இருந்ததே இந்த கட்டபொம்மன் கதைதான். 

ஜெயலலிதா: இப்போ புதுசா ஒரு பிரச்சினை தலை தூக்கியிருக்கு.முத்தக் காட்சிகளை அனுமதிப்பதா இல்லையான்னு? நீங்க என்ன சொல்றீங்க? 

சிவாஜி: சே..சே..வெட்கக்கேடு. முத்தம் கொடுக்கிறதை காட்டவே கூடாது. முத்தம் கொடுக்கிறது மாதிரி நடிக்கணும். மூடிக்காட்டுவதுதான் கலை. பச்சையா உள்ளதை அப்படியே காட்டினா அது கலையாகாது. அதனால் முத்தம் கொடுப்பதையெல்லாம் திரையிலே காட்டக்கூடாது என்பதுதான் என்னுடைய தாழ்மையான வேண்டுகோள். 

ஜெயலலிதா: உங்களுக்கு எவ்வளவோ விசிறிகள் இருக்காங்க.நீங்க யாருக்காவது விசிறியாக இருந்ததுண்டா? 

சிவாஜி: ஓ!இப்பவும் நான் விசிறியாக இருக்கேன். பி.ஆர்.பந்துலு மேடையில் நடிச்சு வந்தபோது, நான் அவருடைய விசிறிகளில் ஒருவன். ஹிந்தி நடிகை நர்கீஸின் விசிறி நான். சார்லஸ் போயர் (Charles Boyer) ரசிகன் நான். 

ஜெயலலிதா: உங்களுக்கு லதாவின் பாட்டு என்றால் ரொம்பவும் பிடிக்கும் போலிருக்கே? 

சிவாஜி: என் தங்கையாச்சே.. பிடிக்காம இருக்குமா. அது மட்டுமா? சமீபத்திலே நான் ஒரு நியூஸ் கேள்விபட்டேன். இண்டர்நேஷனல் லெவல்லே உலகம் பூராவும் ஒலிபரப்பப்படட பாடகர்களின் வரிசையில், லதாவின் பாட்டுக்கள் நாள் ஒன்றுக்கு இருபது மணிக்கும் மேலே ஒலிபரப்பாகுதுன்னு சொன்னாங்க. உலகிலேயே எந்தப் பாடகிக்கும் இல்லாத தனி கவுரவம் என் தங்கச்சிக்கு இருக்கு.


ஜெயலலிதா: நீங்க நாடகங்களிலே நடித்து வந்த காலத்தில் சினிமாவுக்கு அடிக்கடி போவதுண்டா? 


சிவாஜி: அப்ப மட்டும் என்ன?இப்பவும்ந்தான். மெட்ராஸ் சிட்டியிலே நான் பார்க்காம படமே ஓடாது. நேத்து ராத்திரிகூட ஒரு குப்பை படத்துக்கு நான் போயிட்டு வந்தேன். 

ஜெயலலிதா: அந்த மாதிரியான நாளிலே நீங்க ரொம்ப விரும்பி பலமுறை பார்த்த படம் எது?

 சிவாஜி: ருடால்ப் வாலண்டினோ நடித்த 'தி ஷீக்' என்ற படம். 


ஜெயலலிதா: ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும் சில சம்பவங்கள் மறக்கமுடியாததாக அமைந்துவிடும். அந்த மாதிரி உங்க வாழ்க்கையிலே ஏதாவது நடந்திருக்கா? 

சிவாஜி: எகிப்தின் தலைநகரான கெய்ரோவில் ஆசிய ஆப்பிரிக்க படவிழாவின் போது நடந்தது. அன்னிக்கு விழாவுக்கு வந்த படங்களின் ரிசல்ட் சொல்றாங்க. நான் பின்னாலே உட்கார்ந்திருந்தேன். அங்கிருந்தவங்க எல்லாம் என்னை ஏதோ டெக்னீசியனு நினைச்சிருந்தாங்க. அங்கே வந்திருந்தவங்களெல்லாம் பெரியவங்க, உயரத்திலும் ஏழடி. அங்கே பல பெரிய நாடுகளிலிருந்து பல கலைஞர்கள் கூடியிருந்தாங்க. நீதிபதிகள் எல்லோரும் வந்தாங்க. கட்டபொம்மன்தான் சிறந்த படம். கட்டபொம்மனா நடிச்ச நான்தான் சிறந்த நடிகன்னு சொன்னாங்க. என் பேரைச் சொல்லி கூப்பிட்டாங்க. நான் எழுந்து நின்னேன். வாழ்க்கையில் நான் எதற்கும் சாதாரணமா மசிஞ்சு கொடுக்காதவன். நடுக்காட்டில் புலி துரத்தி வந்தபோதுகூட அசையாமல் இருந்தவன். ஆனா அன்னிக்கு கெய்ரோவில் நடந்த அந்த சம்பவம் என்னை அசத்திட்டது. என் பக்கத்தில் உட்கார்ந்திருந்த பத்மினி என்னை தாங்கிப் பிடிச்சிட்டாங்க. இல்லாட்டி நான் நிச்சயம் விழுந்திருப்பேன். நான் என்னையே மறந்து உணர்ச்சி வசப்பட்டது அந்த ஒரு நாள்தான்.



Tags: special sivaji jayalalithaa interview,sivaji jayalalithaa ,sivaji, jayalalithaa ,jayalalithaa 
Powered by Blogger.